இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 2000 புரொபேஷனரி ஆபிசர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இதில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வயது தகுதியில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை: அகில இந்திய அளவில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு இந்த பணிக்கான சரியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலமாக மட்டுமே இந்த பணிக்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க வேண்டும். 14.11.2020 முதல் 04.12.2020 வரை விண்ணப்பிக்கலாம். அதற்கான கட்டணமாக 750 ரூபாயை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பட்டியலினத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: மூன்று கட்டங்களாக இந்த பணிக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது. உத்தேசமாக டிசம்பர் இறுதியில் தொடங்கி மார்ச் வரையிலான காலத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு : https://www.sbi.co.in/careers அணுகலாம்.