சத்துணவு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள்..விண்ணபிக்க இறுதி அவகாசம்

தமிழக அரசின் சத்துணவு துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியிடுவதில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி விவரம்:
காஞ்சிபுரம் மாவட்ட சத்துணவு துறையில் 187 Organizer & Cooking Assistant

காளியிடங்கள்:
Organizer – 80

Cooking Assistant – 107

வயது வரம்பு :

தமிழக அரசின் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் வயது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 40 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

Organizer – இந்த பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

Cooking Assistant – இந்த பணிகளுக்கு 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. பணியில் முன் அனுபவம் இருந்தால் சிறப்பு

ஊதிய விவரம் :

Organizer – ரூ.7,700/- முதல் ரூ.24,200/- வரை

Cooking Assistant – ரூ.3,000/- முதல் ரூ.9,000/- வரை

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 05.10.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அருகிலுள்ள பஞ்சாயத்து அல்லது தாலுகா அலுவலகங்களில் நேரில் சென்று சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்
கூடுதல் விவரங்களை அறிய kancheepuram.nic.in என்ற இணையதளத்தை அணுகவும்

Exit mobile version