தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் கொட்டிக் கிடக்கும் பணியிடங்கள்

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள சிகிச்சை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்

பணி : சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant)

மொத்த காலிப் பணியிடங்கள் : 76

கல்வித் தகுதி : நர்சிங் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 24.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : தகுதி பட்டியல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.600
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி)
விண்ணப்பக் கட்டணம் – ரூ. 300

பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Exit mobile version