இளநிலை வரைவாளர் பணியிடங்கள்.. டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள இளநிலை வரைவாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- இராமநாதபுரம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : இளநிலை வரைவாளர் அதிகாரி

மொத்த காலிப் பணியிடங்கள் : 20

கல்வித் தகுதி :
டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் https://ramanathapuram.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 08.12.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ramanathapuram.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Exit mobile version