Mi 11 ஸ்மார்ட்போன் 108MP கேமராவுடன் உலகளவில் அறிமுகம் : விலை & அம்சங்கள்!

Mi 11 ஸ்மார்ட்போன் 108MP கேமராவுடன் உலகளவில் அறிமுகமாகி விலை & அம்சங்களின் தகவல் வெளியாகியுள்ளது.

சியோமி நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான மி 11 மாடல் ஸ்னாப்டிராகன் 888 SoC மற்றும் 108MP ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் உலகளவில் அறிமுகமானது. சியோமி நிறுவனம், ஒரு மெய்நிகர் நிகழ்வு மூலம் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான மி 11 மாடலை உலகளவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த டிசம்பர் பிற்பகுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மி இந்த ஃபிளாக்ஷிப்ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC உடன் வருகிறது. மேலும் இது ஒரு ஹோல் பஞ்ச் வடிவமைப்பு மற்றும் 2 கே டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது.

மி 11 ஸ்மார்ட்போன் ஆனது 256 ஜிபி வரை உள் சேமிப்பிடத்தையும் வழங்குகிறது. சியோமி தனது மெய்நிகர் நிகழ்வில் Mi 11 உடன் MIUI 12.5 உலகளாவிய வெளியீட்டையும் அறிவித்தது. சியோமி தனது மெய்நிகர் நிகழ்வில் Mi 11 உடன் MIUI 12.5 உலகளாவிய வெளியீட்டையும் அறிவித்தது. மி 11 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலானது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.65,800 க்கும், 8 ஜிபி + 256 ஜிபி மாடலானது தோராயமாக ரூ.70,100 க்கும் அறிமுகமாகி உள்ளது. 

சியோமி நிறுவனம் அதன் மி 11 ஸ்மார்ட்போனில் 4,600 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, இது மி டர்போசார்ஜ் 55W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. இந்த் ஸ்மார்ட்போன் அளவீட்டில் 8.06 மிமீ தடிமன் மற்றும் 196 கிராம் எடையையும் கொண்டுள்ளது. இருப்பினும், அதன் வேகன் எடிஷன் 8.56 மிமீ தடிமன் மற்றும் 194 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

Exit mobile version