12ம் வகுப்பு படித்தவர்களுக்கு கோவை வனத்துறையின் வேலை

கோவையில் செயல்பட்டு வரும் வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனம் (IFGTB)

பணியிடம் : கோயம்புத்தூர்

மொத்த காலியிடங்கள் : 01

பணி : சுருக்கெழுத்தாளர்

கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு :

18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.25,500 முதல் ரூ.81,100 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://ifgtb.icfre.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 30.11.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

The Director, Institute of Forest Genetics & Tree Breeding (IFGTB), Forest Campus, Cowley Brown Road, R.S. Puram, Post Box No. 1061, Coimbatore – 641002

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ. 300

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 200

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் வர்த்தக சோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://ifgtb.icfre.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பைக் காணவும்.

Exit mobile version