தமிழ்நாடு காவல்துறையில் கொட்டிக்கிடக்கும் பல்வேறு வேலைவாய்ப்புகள்…

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அக்டோபர் மாதம் 26-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
Tamilnadu Police

மொத்தப் பணியிடங்கள் : 10,978

துறை : காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை

பதவி மற்றும் காலியிடங்கள்: 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.10.2020

வயது வரம்பு : 01.07.2020-ன் படி 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு : பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், திருநங்கைகள், ஆதரவற்ற விதவைகள், முன்னாள் இராணுவத்தினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, உடற்கூறு அளத்தல், உடல்தகுதித் தேர்வு, உடற்திறன் போட்டிகள், சிறப்பு மதிப்பெண்கள்.

கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnusrbonline.org/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்துக்கொள்ள https://www.tnusrbonline.org/pdfs/CR_2020_Notification.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version