உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிய விருப்பமா??அப்போ இந்த வாய்ப்பு உங்களுக்கானது தான்!!

கட்டிட மேற்பார்வையாளர் பதவிகளுக்கு, பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள், இந்த மாதம்(ஆகஸ்ட்) 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

நிர்வாகம் : உச்ச நீதிமன்றம் (Supreme Court)

வேலை இடம்: புது தில்லி

பதவி மற்றும் காலியிடங்கள்

  • கட்டிட மேற்பார்வையாளர் (Building Supervisor) – 08

கல்வித் தகுதி :

(1) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து சுகாதாரம் அல்லது பொது சுகாதாரம் டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து சுகாதார ஆய்வாளராக தேசிய வர்த்தக சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அல்லது

(2) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் மேலாண்மை இளங்கலை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலை அனுபவம்

(1) அலுவலக கட்டிடத்தின் மேற்பார்வையில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவம்.

(2) ஒரு மதிப்புமிக்க ஹோட்டல் / அலுவலக கட்டிடத்தின் மேற்பார்வையில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவம்.

வயது வரம்பு : 1.8.2020 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://main.sci.gov.in/pdf/recruitment/07082020_114749.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து,சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு, “Application for the post of Building Supervisor” என்று குறிப்பிட்டு, சீல் செய்யப்பட்ட கவரில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Registrar (Recruitment Cell), Supreme Court of India, Tilak Marg, New Delhi-110001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.08.2020

தேர்வு முறை : எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு.

மேலும், இப்பணியிடத்திற்கான வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://main.sci.gov.in/pdf/recruitment/07082020_114749.pdf என்ற இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version