ஆஸ்கர் விருது வென்ற பிரபலங்கள் முழு விவரம்


அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் 95வது அகாடமி விருது நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார்.

விருது பெற்ற பிரபலங்கள் வருமாறு:-

  1. சிறந்த திரைப்படம்

டேனியல் குவான், டேனியல் ஸ்கீனெர்ட் இயக்கத்தில் வெளியான எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere all at once) திரைப்படம், சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

இந்த படத்தை டேனியல் குவான் மற்றும் டேனியல் செய்னர்ட் இணைந்து இயக்கி உள்ளார்கள்.

எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் ஆகிய 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

  1. சிறந்த நடிகர்

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பிரெண்டன் பிரேசர் (Brendan Fraser) வென்றுள்ளார். தி வேல் (The Whale) என்கிற திரைப்படத்தில் சிறப்பான வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

மம்மி படத்தில் நடித்த ரிக் ஓ’கானலாக நடித்து புகழ் பெற்றவர்தான் பிரெண்டன் பிரேசர்.90களில் பிறந்த சினிமா ரசிகர்கள் எவரும் இவரை மறக்க முடியாது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்காக ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு கலைஞர், பல ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்கார் மேடையில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றதைக் காண்பது மனதிற்கு இதமாக இருந்தது.

விருதை பெற்றுக்கொண்ட பிரண்டன் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டார். பிரெண்டன் படக் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

  1. சிறந்த நடிகை

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere all at once) என்கிற திரைப்படத்தில் நடித்த மிச்செல் யோஹ் வென்றார். மிச்செல் யோஹ் மலேசியாவை சேர்ந்த நடிகை. ஆசிய பெண் ஒருவர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வெல்வது இதுவே முதல் முறை.

இந்தப் படத்தின் முதனமை ரோலில் நடிக்க ஜாக்கி சான் தான் முதலில் தேர்வு செய்யப்பட்டாராம். ஒரு கட்டத்தில் ஜாக்கி சானால் நடிக்க முடியாமல் போக படத்தின் இயக்குனர் கதையில் சில மாற்றங்களை கொண்டு வந்து அந்த ரோலை ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மாற்றிவிட்டாராம். அதற்காக அந்தப் படத்தில் ஹீரோயினாக எவிலின் வாங் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மிச்செல் யோஹ் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தப் படத்தில் மிச்செல் யோஹ் நடிப்பு பிரமிக்க வைக்க கூடியது. ஏனென்றால் எமோஷன் காட்சிகளில் எமோஷன் ஆக நடிப்பது, சண்டைக் காட்சிகளில் எதிரிகளை புரட்டி எடுப்பது, தற்காப்புக் கலையில் எதிரிகளை துவம்சம் செய்வது என பல பரிணாமங்களில் தனது 200 சதவீதத்தை இந்த படத்திற்காக கொடுத்துள்ளார்.

  1. சிறந்த படத்தொகுப்பாளர்

எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் பவுல் ரோஜெர்ஸுக்கு (Paul Rogers) சிறந்த படத்தொகுப்பாளருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

  1. சிறந்த இயக்குனர்

டேனியல் குவான் மற்றும் டேனியல் ஸ்கீனெர்ட் ஆகியோருக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படத்தை இயக்கியதற்காக அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

  1. சிறந்த துணை நடிகர்

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை கே ஹூய் குவான் (Ke Huy Quan) வென்றார். எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere all at once) என்கிற திரைப்படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

  1. சிறந்த துணை நடிகை

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜேமி லீ கர்டிஸ் (Jamie Lee Curtis) வென்றுள்ளார். எவ்ரிதிங் எவ்ரிவேர் (Everything Everywhere all at once) என்கிற திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

  1. சிறந்த ஆவணப்படம்

சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை நாவல்னி என்கிற திரைப்படம் வென்றுள்ளது. இப்படத்தை எடுத்த டேனியல் ரோகர், ஒடேசா ரே, டயான் பெக்கர், மெலானி மில்லர், ஷேன் போரிஸ் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

  1. சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்

சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை அன் ஐரிஸ் குட்பாய் (An Irish Goodbye) என்கிற குறும்படத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. இப்படத்தை எடுத்த டாம் பெர்க்லே மற்றும் ரோஸ் ஒயிட் ஆகியோர் இவ்விருதை பெற்றுக்கொண்டனர்.

  1. சிறந்த ஒளிப்பதிவாளர்

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருது ஜேம்ஸ் பிரெண்ட் (James Friend) என்பவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) என்கிற படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

  1. சிறந்த ஒப்பனைக் கலைஞர்

சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான ஆஸ்கர் விருதை அட்ரியன் மொரோட், ஜுடி சின் மற்றும் அன்னேமெரி பிராட்லே ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தி வேல் (The Whale) படத்துக்காக அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

  1. சிறந்த ஆடை வடிவமைப்பாளர்

சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை ருத் இ கார்டர் (Ruth E. Carter) வென்றுள்ளார். பிளாக்பாந்தர் வகாண்டா ஃபாரெவர் (black panther wakanda forever) திரைப்படத்துக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

  1. சிறந்த சர்வதேச திரைப்படம்

சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை ஆல் ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) என்கிற ஜெர்மனி நாட்டு திரைப்படம் வென்றது.

  1. சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு

சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) என்கிற ஜெர்மனி நாட்டு திரைப்படம் வென்று உள்ளது.

  1. சிறந்த ஒரிஜினல் இசை

சிறந்த ஒரிஜினல் இசைக்கான ஆஸ்கர் விருதை ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) என்கிற ஜெர்மனி நாட்டு திரைப்படம் வென்று உள்ளது. அப்படத்திற்கு இசையமைத்த வோல்கர் பெர்டெல்மேன் இவ்விருதை பெற்றுக்கொண்டார்.

  1. சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்

சிறந்த விஷுவல் எபெக்ஸுக்கான ஆஸ்கர் விருது ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் தி வே ஆப் வாட்டர் (Avatar: The Way of Water) திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.

  1. சிறந்த திரைக்கதை

சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere all at once) என்கிற திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.

  1. சிறந்த தழுவல் திரைக்கதை

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை உமன் டாக்கிங் (Women Talking) என்கிற திரைப்படம் வென்றுள்ளது. அப்படத்திற்கு திரைக்கதை அமைத்த சாரா பொல்லேவுக்கு (Sarah Polley) இந்த விருது வழங்கப்பட்டது.

  1. சிறந்த அனிமேஷன் குறும்படம்

தி பாய், தி மோல், தி பாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ் என்கிற குறும்படத்துக்கு சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது.

  1. சிறந்த ஒரிஜினல் பாடல்

ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்கிற பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் அப்பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

எம்.எம்.கீரவாணியின் இசையமைப்பில் அவரது மகன் கைலாபைரமும், ராகுலும் இணைந்து பாடிய பாடல் இது.

ஜானெல்லே மோனே மற்றும் கேட் ஹட்சன் ஆகியோர் “நாட்டு நாட்டு” பாடல் விருது வென்றதை அறிவித்த போது, மேடையில் ஏறிய, கீரவாணி, தி கார்பெண்டர்ஸ் (The Carpenters) இசையைக் கேட்டு வளர்ந்ததாகக் கூறினார்.

இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி மற்றும் இந்தியாவுக்கு நன்றி கூறினார். மனதில் ஒரே ஒரு ஆசை இருந்தது, அதே போல் ராஜமவுலி மற்றும் எனது குடும்பத்தினரின் ஆசை, ஆர்ஆர்ஆர் வெற்றிபெற வேண்டும், ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கீரவானி பாடினார், அதைக் கேட்ட கூட்டம் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தது.

  1. சிறந்த ஒலி

டாப் கன் மேவ்ரிக் திரைப்படம் சிறந்த ஒலிக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பனேஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டனர்.

  1. சிறந்த அனிமேஷன் படம்

சிறந்த அனிமேஷன் பிரிவில் கில்லர்மோ டெல் டோரோஸ் பினோச்சியோ (Guillermo del Toro’s Pinocchio) என்கிற திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது.

23.சிறந்த ஆவண குறும்படம்

இந்தியாவின் கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கிய தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்கிற குறும்படம் சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. இப்படம் தமிழகத்தில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமான தெப்பக்காட்டில், காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதி யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிகின்றனர்.

2017-ம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகம் அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த ஆண் குட்டி யானை காயத்துடன் சுற்றித்திரிந்தது. இந்த யானையை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு வந்து, ரகு என பெயர் வைத்து பொம்மனும், பெள்ளியும் பராமரித்து வருகின்றனர்.

தாயைப் பிரிந்து தவித்த இரண்டு யானை குட்டிகளை பராமரிக்கும் பழங்குடியினத் தம்பதியின் கதையை ஆவணப்படமாக்கி இருக்கிறார் உதகையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ். இந்நிலையில் தான் தற்போது ஆஸ்கர் விருது வென்றுள்ளது ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’.

Exit mobile version