இந்தியாவில் 5 லட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்புகள்!!

நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 4.52 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தகவல்.

டெல்லி,
இந்தியாவில் தடுப்பூசி போடும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் கொரோனா பரவல் விகிதம் என்பது தொடர்ந்து குறைந்து வருகிறது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி, நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 14,623 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது நேற்றைய பாதிப்பை காட்டிலும் சற்று அதிகமாகும். நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,41,08,996 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19,446 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 3,34,78,247 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு இன்று மட்டும் 197 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த மொத்தமாக இதுவரை நாட்டில் 4,52,651 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது 1,78,098 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது 229 நாட்களில் இல்லாத வகையில் குறைந்த எண்ணிக்கை ஆகும். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.15 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.33 ஆகவும் உள்ளது.

மேலும் நேற்று மட்டும் 41,36,142 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும், இதுவரை மொத்தமாக 99,12,82,283 டோஸ்கள் இந்தியாவில் செலுத்த பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை என்பது 100 கோடி என்ற இலக்கை எட்ட இருக்கிறது.

Exit mobile version