இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டியில் விளையாடவுள்ளது.
ஒரு நாள் போட்டி ஜூலை 22ம் தேதியும், டி20 போட்டி ஜூலை 29ம் தேதியும் தொடங்குகின்றன. ஒரு நாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி பங்கேற்கிறது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா, கோலி,பாண்ட்யா, பும்ரா, பந்த்,ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கே.எல்.ராகுலும் அணியில் இடம்பெறவில்லை. இவர்களுக்கு பதிலாக ஷூப்மன் கில், சஞ்சு சாம்சன், ருத்ராஜ், தீபக் ஹூடா, அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் ஆகியோர் விளையாடவுள்ளனர்.
ஒரு நாள் தொடரின் ஆட்டங்கள் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கும் டி20 தொடரின் ஆட்டங்கள் இரவு 8 மணிக்கும் தொடங்குகின்றன.
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் மோதும் இந்த போட்டியை எதில் காணலாம்?
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தொடரின் உரிமையை 2024வரை பேன்கோட் ஓடிடி தளம் பெற்றிருப்பதால் ஒரு நாள், டி20 தொடர்கள் அதில் ஒளிபரப்பாகின்றன. இந்த போட்டியை டிவியில் பார்க்க விரும்புபவர்கள் டிடி ஸ்போர்ட்ஸ் சேனலில் காணலாம். (கடந்த 15 வருடங்களில் முதல்முறையாக இந்திய அணி விளையாடும் வெளிநாட்டு கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் நேரடி உரிமை டிடி ஸ்போர்ட்ஸ்க்கு கிடைத்துள்ளது) மேலும், ₹99 செலுத்தினால் ஒருநாள், டி20ன் தொடர்களை பேன்கோட் ஓடிடி தளத்தில் பார்க்க முடியும். குறிப்பு: டிவி/செல்போன்/லேப்டாப் ஒன்றில் மட்டும் பார்க்க முடியும்.
