நூலகங்களுக்கும் தளர்வு-190 நூலகங்கள் நெல்லை மற்றும் தெங்காசி மாவட்டங்களில்.

நூலகங்களுக்கும் தலர்வுகளில் சரி பங்கு. நெல்லை மற்றும் தெங்காசி மாவட்டங்களில் 190 நூலகங்கள் திறப்பு.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 190 நூலகங்கள் இன்று திறக்கப்பட்டன. இந்த ஊர்களில் உள்ள பகுதி நேர நூலகங்களை திறக்க அனுமதிக்கவில்லை. ஆனால் மற்ற ஊர்களின் நூலகங்கள் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையிலுள்ள மாவட்ட மைய நூலகம், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என்று மொத்தமுள்ள 190 நூலகங்களும் இன்று திறக்கப்பட்டதாக மாவட்ட நூலக அலுவலர் இரா. வயலட் தெரிவித்துள்ளார்.

நூலகத்தில் ஒரே இடத்தில் அதிகளவில் வாசகர்கள் கூடும் வாசிப்பு பிரிவுக்கு அனுமதியில்லை. நூலகத்தில் மாஸ்க் அணிவது அவசியம். மேலும் நூலகத்தில் நுழையும்போது சேனிடைஸர் உபையோகிக்க வேண்டும். அதேநேரத்தில் நூலகத்துக்கு வந்து புத்தகங்களை வீடுகளுக்கு எடுத்துச் சென்று படிக்கலாம். நூலகங்கள் இன்று திறக்கப்பட்டிருந்தாலும் வாசகர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே நூலகங்களில் காணப்பட்டது.

Exit mobile version