அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம் மொவ்ண்ட்கொமெரி ஹைதுர்பர்க் என்ற பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன.
இந்நிலையில், மொவ்ண்ட்கொமெரி நகருக்கு மின் விநியோகம் வழங்கும் மின் கம்பி மீது நேற்று இரவு சிறிய ரக விமானம் மோதியது. 2 பேர் பயணித்த சிறிய ரக விமானம் மின் கம்பி மீது மோதி அந்தரத்தில் தொங்கியது. விமானம் மோதியதால் மின் இணைப்பு தடைபட்டது. இதனால், 1 லட்சம் வீடுகள், தொழில் நிறுவனங்களில் மின் இணைப்பு தடைபட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மின்கம்பி மீது மோதி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் விமானத்தில் சிக்கிய 2 பேரையும் பத்திரமாக மீட்டனர். மேலும், விமானம் மோதியதால் இருளில் மூழ்கிய நகருக்கு மின் இணைப்பை மீண்டும் வழங்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.