கொரோனா காரணமாக வீட்டில் இருக்கும் குழந்தைகள் செய்யும் சேட்டையை சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர்களது பெற்றோரிடம் கேட்டால், புத்தகம் போடும் அளவிற்கு கதை சொல்வார்கள். நிலைமை இப்படி இருக்க, குழந்தைகளை வைத்து சமாளிக்கும் ஆசிரியரை பார்த்து பாராட்ட வேண்டும் என பெற்றோர்கள் சொல்வதை கேட்க முடியும்.
இந்நிலையில்,பிரபல வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா விலங்குகள் செய்யும் சேட்டைகளை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காகிதத்தை வைத்து குட்டி யானை ஒன்று தனது காதுகளை சுத்தம் செய்யும் வீடியோவை 9 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.
மரத்திலிருந்து மின்னல் வேகத்தில் இறங்கும் குரங்கு ஒன்றை, பள்ளிக்கு செல்லும் வாகனத்தை தவற விட்டதால் தான் இப்படியொரு அபார ஓட்டம் என கலாய்த்திருக்கிறார், சுஷாந்த். இந்த வீடியோவை 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
செம்மறி ஆட்டின் மேல் ஏறி வலம் வந்தவரை, அந்த ஆடு என்ன செய்கிறது என நீங்களே பாருங்கள். Return gift என்ற பெயரில் பதிவிட்டுள்ள அந்த வீடியோ 17 ஆயிரத்துக்கு அதிகமான ரசிகர்களை ஈர்த்துள்ளது.
கண் இமைக்கும் நேரத்தில் கடக்கும் மாடுகளை பார்த்து ஆண் சிங்கம் அமைதியாக படுத்து இருக்க, திடீரென பாய்ந்து வேட்டையாடுகிறது பெண் சிங்கம். பொருட்களை வாங்குவதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு என அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை 22000 க்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.