அந்த நாடகத்தின் முடிவு- சீ.குறிஞ்சிச்செல்வன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 59 அந்த நாடகத்தின் முடிவு சீ.குறிஞ்சிச்செல்வன்

” ஒரு வாரமாய் வேலைக்குப் போகவில்லை , முகுந்தன். கண்களில்  கோளாறு.  கண் கள்  எப்போதும் உறுத்திக் கொண்டே இருந்தது. இவன் வேறு, சும்மா இல்லாமல் கை யால் கசக்கி கசக்கி பெரிதாய் வீங்க செய்து விட்டான். செக் கச் செவேலென கோவைப் பழம் போல் ஆகிவிட்டது இர ண்டு கண்களும்…”

 தம்ளர் தண்ணீரில் கண்களை பொருத்தி மூடி திறந்து பார்த் தான். ஒன்றும் பலன் இருப்பது போல் தெரியவில்லை . கடை சியாய் , ரெண்டு நாள் மட்டும் லீவு வேண்டு மென்று ஞான வேலு முதலாளியிடம் ஆபீஸ் போய்  சொல்லி விட்டான் …

ஞானவேலு, வெறுமனே தலை யாட்டி , வைத்தான். அரை  குறை தலையாட்டல் போல் இருந்தது அது. ரெண்டு நாள் கலெக்ஷன்  நடக்காது என்று யோசித்திருக்க வேண்டும் . சரவணனை வைத்து சமா ளித்து கொள்ளலாம்  என்று தோன்றி இருக்க வேண்டும்.  சரவணனுக்கு , அவ்வளவு சாதுர்யம் போதாது.  யாரிடம் எப்படிப் பேசி பைசா கறப்பது என்றெல்லாம் தெரியாது.

 ‘ஐ டிராப்ஸ்’ வாங்கி போடச் சொல்லி  நூறு ரூபாய் தாளை பர்ஸில் இருந்து எடுத்து  சிரித் துக் கொண்டு நீட்டினான் முத லாளி . கை நீளவில்லை , முகு ந்தனுக்கு .

 “சும்மா வாங்கிக்க தம்பி என்று ரெண்டு தரவை சொல்லியும் அவன் வாங்கவில்லை.  சும்மா என்கிற அந்த வார்த்தை பிர யோகம் முகுந்தனுக்கு ஏனோ பிடிக்கவில்லை. ” போனால்  போகிறது ஒழிந்து போ. அட பா வமே!  என்று நினைத்து கொடு ப்பதை உடம்பு கூசாமல் எப்படி வாங்கிக் கொள்வது? என்கிற எண்ணம் முகுந்தனுக்கு . 

ஒரு ஐநூறு ரூபாயாவது எடுத் து நீட்டி சம்பளத்தில் பிடித்து கொள்வதாய் சொல்லி தந்தி ருந்தால் நன்றாக இருந்திருக் கும். அப்படியெல்லாம் செய்ய வில்லை. நூறு ரூபாய் நீட்டி யது கூட பெரிய அக்கறையில் என்று சேர்க்க முடியாது. ஞான வேலுவுக்கு அதெல்லாம் பெரி

ய தொகையே கிடையாது . ‘லகர’ங்களில் விழுந்து புரள் கிற புண்ணிய ஆத்மா அது. 

வாலாட்டிக் கொண்டு , கூடவே பின் தொடரும்  நாலு கால் ஜீவ ராசி மாதிரி தன்னையே சுற் றிச் சுற்றி வர வேண்டும் என்ற  ஒரு  தந்திரம். சின்ன பரீட்சை. அந்த நூறு ரூபாய் , நீட்டல் .

முகுந்தன் வாங்கிக்கொள்ள மாட்டான் என்று ஞானவேலு வுக்கு எப்படியோ புரிந்து விட் டது.  அப்புறம் விட்டு விட்டான் , அவன்.  தன்னை விட ஐந்தாறு வயது பெரியவனான ஞான வேலுவை சமயத்தில் சார் என் றும் அண்ணன்  என்றும் அழை ப்பது முகுந்தன் வழக்கம். 

முகுந்தன் , பீரோ சாவியை மறக்காமல்  மேஜைமேல் வைத்தான்.  பணமெல்லாம் பீரோவுல இருக்கு  என்று சொல்லிவிட்டு உழைத்து தேய்ந்து உருக்குலைந்த தன்  செருப்பில்   கால்களை நுழை த்த  போது, “”சீக்கிரம் வந்துரு வேலை நிறைய்ய  நிறைய்ய கிடக்குது ” என்றான்  ஞானம் விறைப்பாய் . அக்னியில் தெறித்த பொறியாய்  ‘சுர்ரென’ மனசு சுட்டது இவனுக்கு …

மூக்கை உறிஞ்சி கொண்டு வந்துர்றேண்ணே என்று வளைந்த குறுகலான மாடிப் படிகளில்  உறுத்தும் கண்களி ன்  ‘நறநற ‘ அவஸ்தையோடு  கீழே,  இறங்கினான்  முகுந் தன்.

முகுந்தன் இளம் குறுத்து. இருபது வயது கூட இன்னும்  எட்டவில்லை , அவன் . பிளஸ் டூவில் பிஸிக்ஸ் பாடத்தில் பெயில் ஆகிப்போய் விட்டான். அவனோடு அதே பாடத்தில் முக்கால்வாசிபேர் பெயிலாகிப் போனார்கள், அந்த வருஷத் தில் . 

மாயாண்டி ஸாரிடம் டியூஷன் மட்டும் போய் இருந்தால் அவ னும் இந்நேரம் பாஸாகி விட்டி ருப்பான். பாஸாகி, காலேஜ் பக்கம்  போய் இருப்பான் அவன் என்று சொல்ல முடி யாது. ஒரு சின்ன சந்தோஷ மாவது கிடைத்திருக்கும் . பாஸ் என்கிற கெளரவத்தோடு எங்காவது வேலைக்கு தான் போய் இருப்பான், ஏதோ ஒரு இடத்திற்கு . ஞானவேலுவிடம் வந்து சேரும்படி  ஆகிவிட்டது.

 எதை மட்டும் படித்துக் கொண் டு போனால் , தோல்வி நேரா மல் தவிர்க்கலாம்  என்பது மா யாண்டி  ஸாருக்கு நல்ல  அத் துபடி. அந்த விஷயத்தை மறந் தும் கூட கிளாஸில் மனிதர் அவிழ்த்துவிட மாட்டார். டியூ ஷனுக்கு வந்தால் நல்லது என் பார். அவ்வளவுதான். 

யாரையும்  எப்போதும் வற் புறுத்துகிற வழக்கமெல்லாம் இல்லை அவருக்கு … யார் பெ யிலானாலும், அதற்கெல்லாம் கொஞ்சமும் அலட்டிக் கொள் ளாத ஸார், அவர்…

பரீட்சை , இரண்டொருமுறை அவன்    எழுதிப்பார்த்தும் ஒன் றும் பிரயோஜனமில்லை. மிக மோசமான மார்க்குகள் தான் எடுத்திருந்தான் , முன்பு வாங் கி இருந்ததை  விட . 

புரியாத ஒன்றோடு எப்படி  மல் லுக் கட்டினாலும்,  திமிரி ஓடி , நெருங்க வாய்ப்பற்று  எட்டி உதைத்து , குப்புற தள்ளி நழுவி விடுகிறது. பிஸிக்ஸ் ஒரு விதத்தில் வாடிவாசல் கருப்பு ராட்சஷன் என்பதை புரிந்து கொண்டான் முகுந் தன்.  அப்போது ,  ஒரு மிரட்சி  வந்து சம்மணமிட்டு விட்டது , அவனுள்…

யாரோ சொன்னார்கள் என்று ‘டைப்ரைட்டிங்’ போய்க் கொண் டிருந்த போது தான் ஞான வேலு அவனுக்கு பரிச்சயமா னான். “கலெக்ஷன் வேலைக்கு ஆள் வேணும்  ஆபீஸுக்கு வர் றியா? ” என்று தோளில் கை போட்டு சொன்னான், இவனி டம்.

 படிப்பு பற்றி  எல்லாம் அவன் எதுவும் கேட்கவில்லை.   அப் படி மூக்கு நுழைத்து அநாவசி யமாய் கேட்காதது முகுந்த னுக்கு ரொம்ப  பிடித்திருந்தது. இருந்தாலும்,  பிஸிக்ஸ் பாடத் தை- அதில் கண்ட தோல்வி யை-  நினைத்த போது ஒரு நெ டிய  பெருமூச்சு முகுந்னை மீறி எழுந்தது. 

 ஒரு கருப்பு பிசாசு திடீரென எங்கிருந்தோ  வந்து டைப் ரைட்டிங் அறைக்குள்   நுழை ந்து விட்டது போல் கூட  இருந் தது. காற்றாடி நல்ல விசையில் சுழன்ற போதும் ‘குப்’ பென்று வியர்த்து கொட்டியது , அவனு க்கு  .

 ஞானவேலு , முகுந்தனையே உற்றுப் பார்த்து கொண்டிருந் தான். எதுவும் கேட்டுக் கொள் ள வில்லை .  தீவிரமாய் எதை யோ யோசித்து  அதை மறைக் க முயல்வதை சுலபமாய்  இன ம் கண்டான். அவனிடம் இருந் து காட்டமாய் சிகரெட் நெடி வந்தது.

  நல்ல வசதி படைத்தவன்  என்பதை  நன்கு போஷிக்கப் பட்ட  அந்த உடம்பும் , வைரமோ திரமும்  , மைனர்  சங்கிலியும் சொல்லியது. 

முகுந்தன் வீட்டில்  கேட்டுக் கொண்டு சொல்வதாய்  அப் போதைக்கு ஒரு பதில்  சொ ல்லி வைத்தான். ஞான வேலு  வெண்பற்கள் தெரிய அழகாய் சிரித்து விட்டு பைக் சாவியை சுழற்றியபடி  எழுந்தான். அவ ன் நகர்ந்த போது ‘புரூட் ‘செண் ட் வாசனை வந்தது.

 டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் நடத்துகிற விஜயன் ஸாரிடம் ரொம்ப நேரம்  வராந்தாவில் நின்று பேசிக் கொண்டிருந்தா ன் ஞானவேலு. மாடிப்படியின் கீழேயும் சிகரெட் பிடித்தபடி அவர்கள் ரொம்பநேரம் எதை யோ பேசிக் கொண்டிருந்தார் கள்.  மேலே வந்த விஜயன்  ஸார், வழுக்கை தலையை தட வியபடி  நேரே முகுந்தனிடம்   சிரித்துக் கொண்டு வந்தார்.

 “எல்லோருக்கும்   கால முண்டு நல்ல நேரமுண்டு வாழ்விலே ” என்று பாடினார் … விஜயன் ஸார் அடிக்கடி இப்படி ஏதாவது பாடிக்கொண்டே இருப்பார். ஜாப்டைப்பிங் செய்கிற போது, இன்னும் நிறைய பாடுவார்.

 “ஒரு சின்ன மிஸ்டேக் இதுல யாராவது கண்டு பிடிச்சா டீயும் வடையும் வாங்கித்தர்றேன் என்று தான் டைப் செய்த அந்த தாட்களை அங்கே இருப்பவர் களிடம் கொடுப்பார். யாரா லும்  கண்டுபிடிக்க முடியாது. 

ஆனால்,  எல்லோருக்கும் டீ, வடை தவறாமல்  வந்து சேர் ந்து விடும்.

“ஞானவேலு தங்கமான பயல். எடுத்த எடுப்புல ஐயாயிரம் தர்றேன்னுட்டான். யாருக்கு கொடுத்து வெச்சிருக்கோ”… என்றார் விஜயன். 

முகுந்தன் அதை உள் வாங்க சில நிமிஷங்கள்  பிடித்தது. “வீட்டுக்கு உதவியா இருக்கு மில்லையா” என்றார் , அவர் கண்களை சிமிட்டி . முகுந்தன் அவரைப்  பார்த்தபடி யோச னையாய்  ஏபிசிடி அடித்தான். இன்னும் வேகம் கை கூட வில்லை அவனுக்கு ….

ஞானவேலு ,ஒருநாள் மதியம்  முகுந்தன்  வீட்டுக்கே வந்து விட்டான். முகுந்தன் அம்மா அப்பாவிடம் சிரித்து சிரித்து பேசினான்.

 ‘முகுந்தன் ஒரு கற்பூரம் ‘என் றான் , பேச்சு வாக்கில் . இத மான  சாரலில் நின்று கொண் டிருப்பது போல்,  இருந்தது அவனைப் பெற்றவர்களுக்கு . 

 தகரம் போட்ட வீடு அது. நீள மாய் ஒரு அறையும், ஒரு கட் டில் மட்டும் அசெளகர்யமாய் போடுமளவு ஒரு  சிறிய அறை யும் இருந்தது. உஷ்ணத்திற்கு ஒருபோதும் அங்கே பஞ்சம் இருந்தது இல்லை. 

“வீட்டு முன்னால  ஒரு வேம்பு வெச்சிட்டா  காற்று  குளுமை யா வரும்”… என்று சொல்லி இருந்தார்   வீட்டின் உரிமையா ளர் நல்லம்மை ஆச்சி. அவரே வேலையாளிடம்  சொல்லி அத ற்கு இரண்டே நாளில் ஏற்பா டும் செய்திருந்தார்  . 

வேம்பு ஒரு ஆள் உயரத்திற்கு வந்திருந்தது. பெரிதாய்  இன் னும் கிளை பரப்பவில்லை. காலை மாலை வேளைகளில்  பட்சிகள் மரத்தில் வந்தமர்ந்து விநோதமான ஓசை எழுப்பின. சாணிமெழுகிய மண்தரையில் பாய் போட்டு அமர்ந்து வேடிக் கை பார்த்தார்கள். பேசி சிரித் தார்கள். வெட்ட வெளியில் சந் தோஷமாய் எல்லோரும் சாப் பிட்டார்கள். ஓய்வு எடுத்துக் கொண்டார்கள் .

 முகுந்தன்  வெளியில் படுத்து வானம் பார்த்தான். பிஸிக்ஸ் பரீட்சைக்கு  குண்டு லைட் போட்டுக் கொண்டு  படித் தான். பெருச்சாளி, பூரான் வகையறாக்கள் அச்சமின்றி அவன் காலில் சர்வசாதாரண மாய் ஊர்ந்து போயிற்று.

 மதில் சுவரையொட்டி பெரிய பாறாங் கற்களை கொட்டி வைத்திருந்தார் நல்லம்மை ஆச்சி. மழைக் காலத்தில் நிறைய ஜீவராசிகள் வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் சக ஜமாய் புழங்கலாயிற்று. 

ஒரு மழை நாளில் நட்டுவாக் காலி, அம்மா  கோலம் போட் டுக் கொண்டிருந்த  போது கடித்து விட்டது. ஆச்சி கொப் பறை தேங்காய்  தேடி எடுத்து  வந்து கொடுத்தது. முடிந்தால், நல்ல வீடு பார்த்து போயிருங்க என்று அப்பாவை தனியாய் அழைத்து  சொல்லி விட்டுப் போனது.

“முன்னே  இங்கே இந்த இடத் துல மாடுகள் வரிசையா கட்டி இருக்கும். நல்லம்மை ஆச்சி க்கு வயசாயிட்டுது. மாடுகள் பார்க்க முடியாமல் வித்துரு ச்சு”. அவங்க எனக்கு அத்தை முறை ஆகணும் என்று முகுந் தன் அப்பாவிடம் சொன்னான் ஞானவேலு .

 அப்பா, தலையாட்டி கேட்டுக் கொண்டார். 

ஞானவேலு வியர்வையில் நனைந்திருந்தான். அவனுக்கு  ஏஸி இல்லாமல் முடியாது . உட ம்பு  எரிவது போல் இருந்தது . சட்டைக்குள் அடிக்கடி ஊதிக் கொண்டான். காற்றாடி ஒன்று தருவதாய் முகுந்தன் அம்மா விடம் சொன்னான்.  அது, முகுந்தனை வேலைக்கு வர வழைக்கிற தூண்டில் என்பது துளியும் புரியாமல் அம்மா சிரித்தாள். ஞான வேலுவுக்கு குடிக்க தோட்டத்தில் எலுமிச் சை  பறித்து வந்து பானைத் தண்ணீரில்  சர்பத் வேறு  போ ட்டு கொடுத்தாள்  … 

காற்றாடி  அப்போதே வந்து விட்டது போல, அது அறையில் சுழன்று கொண்டிருப்பது போல,  அவள் மனம் பேரா னந்தத்தில் தளும்பியது.

ஞானவேலு ,” தம்பியை நம்மட்ட வேலைக்கு அனுப்பி வைங்கம்மா ஓஹோன்னு ஆக்கி காட்டறேன் என்று கடி காரம் பார்த்து கை கூப்பி னான்.

 “அதுக்கென்ன நல்ல நாள் பார்த்து அனுப்பினா போச்சு” என்றாள் அம்மா. அவன் தலை குனிந்து வாசலை கடக்க வேண்டி இருந்தது. 

சந்தில் நடந்து யமஹா பைக் கை கிளப்பி விர்ரென்று அவன் விரைந்த போது ,

“ஞானம்  தங்க கம்பிடா முகுந் தா”  என்றாள், அம்மா . பத்து நிமிஷ பேச்சில் என்ன கண்டு விட்டாளோ   அப்படி என்றிருந் தது முகுந்தனுக்கு . 

“ஏதோ ஜோசியம் …ஏதோ கோ வில்ன்னு …பிழைப்பு ஓடிண் டிருக்கு .  ஐயாயிரம் தர்றதா சொல்றான். போகப் போக ஏற்றி தர்றதா வேற சொல் றான் விருப்பம்னா கொஞ்ச காலம் போயேன் …”  என்றார் அப்பா. 

அப்பா எதையும் கட்டாயப்படுத் த மாட்டார் . அம்மா அப்படியல் ல பேசிப் பேசி ஒருகட்டத்தில், சம்மதம் சொல்ல வைத்து விடு வாள். குடும்பத் தேர்  பார்த்துப் பார்த்து ஓட்டுகிற  மனுஷி , அவள்.  பாவம் அவளை குறை சொல்வது  பிசகு.  சமயத்தில் , சாமியாடவும் நேர்ந்து விடு கிறது அவளுக்கு.

பிஸிக்ஸ் பாடமும் ஒத்துழைக் காததால், அப்பா சொல்வதும் முகுந்தனுக்கு  சரி என்று பட் டது. மறு நாளே ஞானவேலு ஆபீஸுக்கு வேலைக்கு  போக ஆரம்பித்தான் , அவன். 

ஒரு வாரத்தில் வேலை பிடிபட் டுவிட்டது முகுந்தனுக்கு. ஞான வேலு  அவனை கற்பூரம் என்று சொன்னது துளியும்  வீண் போகவில்லை.

 வாடிக்கையாளர்கள் மன மறிந்து நடந்து கொண்டான் , அவன். “நல்ல செலக்ஷன் . உனக்கு ஏற்ற ஆளு தான் இவன். விட்டுராதேப்பா என்று  ஞானவேலுவிடம் சிலர்  சொல் லவும் செய்தார்கள். 

தன் கணிப்பில் அபார நம்பிக் கை இருப்பதை வெளிக்கா ட்டாமல் சிரித்து மழுப்பினான் ஞானவேலு , அவர்களிடம் . 

லெட்ஜர்கள்  புரட்டி ஞான வேலு சொல்லாமலே கணக்கு வழக்குகளை கற்றுக் கொண் டு விட்டான் முகுந்தன். பகல் வேளை ,மாலை வேளையில் , இற்றுப் போன சைக்கிளில்  பல ஊர்கள் சென்று சென்று கலெக்ஷன் பார்க்க வேண்டி இருந்தது. 

தொடை இரண்டும் விண்விண் என்று தெறித்தது. இரவில் வெந்நீர் வைத்து அம்மா அவ னுக்காய்  காத்திருந்தாள்,  தினமும் .

சம்பளம் ஐயாயிரம் என்று சொன்னவன் முதலாளி மூளை விழித்து கொள்ள  மூவாயிரம் தான் முகுந்தனுக்கு கொடுத் தான். அதையும்  குறிப்பிட்ட தேதியில் தர மனம் ஒப்பவில் லை , அவனுக்கு . 

மாட்டு கொட்டகையில் இருக் கிறவனுக்கு இது போதும் என்று ஒருவித அலட்சியம் தோன்றி இருக்கலாம். 

ஆயிரம், ஐநூறு என பிரித்து பிரித்து மூன்று நான்கு தவ ணைகளில் தான் அதையும் கொடுத்தான். “பணம் சரியா ரோலாகலைப்பா ” என்று கூசா மல் சொன்னான். முகுந்தன் அப்பா போய்  சம்பளம் பற்றி விசாரித்த  போது ஆபீஸ் நஷ் டத்தில் போவதாய்  சொல்லி, காபி வாங்கி தந்து அவரை  அனுப்பி வைத்தான் ஞானம்.

 “என்னப்பா நஷ்டம் அது இது ங்கறான்  ? ”  என்று அப்பா முகு ந்தனிடம்  கேட்க…” நான் அங் கே  போன பிறகு , ஆளு நல் லா  கொழிக்கிறான். நிறைய சப் கான்ட்ராக்ட் எடுக்கறான். எல்லாம்  சுத்த டிராமாப்பா. நம்பாதே.  மனசு வரலை அவ னுக்கு  என்றான் முகுந்தன், அதற்கு …

முகுந்தன் வேலைக்கு வராத தால் வீட்டிற்கு,  தினமும் இர ண்டு மூன்று ஆட்களை அனுப் பினான் ஞானம். “பையனுக்கு கண்ணுல பிரச்சனை சரியா னதும் வருவான் ” என்றாள் அம்மா ,  அழுதுகொண்டே… 

முகுந்தன்  கண் ஆஸ்பத்திரி போகாமல் உள்ளூர் ஆஸ்பத் திரியில் தான் போய் காண் பித்தான். அது சர்க்கார் ஆஸ் பத்திரி என்பதால், கண்பார்க்க தனிப்பிரிவு என எதுவும் இல் லாததால்  வெள்ளை மாத்தி ரைகளும் மீன்கண் மாத்திரை களும்  கொடுத்து அனுப்பி இருந்தார்கள். அம்மா அவற் றை  சிரத்தையோடு வேளை தவறாமல் கொடுத்து வந்தாள், அவனுக்கு . 

 பார்க்கின்ற எல்லாமும் மங்க லாய்  ஒருவித மச மசப்பாய் தெரிய ஆரம்பித்தது முகுந் தனுக்கு. கண்கள் ரெண்டும் சிவந்து வலித்தது. நீர் சுரந்தது . பிஸிக்ஸ் புத்தகத்தை எடுத்து ஒரு நிமிஷம்  கூட பார்க்க முடி யவில்லை  , அவனால் …

ஞாபங்களை கூட்டி கூட்டி ஒரு நோட்டில் சீட்டு கம்பெனியின் கணக்குகளை எழுதிக் கொ ண்டு ஒரு நாள் மாலை அம்மா வுடன் ஞானம் ஆபீஸு க்கு போனான் முகுந்தன்.

 ஞானம், யாருடனோ  இரைந்து பேசிக் கொண்டு இருந்தான். இவர்கள் வந்திருப்பதை   கண் டு கொள்ளவில்லை. ” ஒளுங் கா வரமுடியாதா வேலைக்கு. ஸ்கூல் பையன் மாதிரி லீவ் போடறே”… முகுந்தனைப் பார் த்து கத்தினான்.

“பையனுக்கு கண்ணுல பிரச் சனைங்க… இன்னும் சரியா கலை … வேற ஆள்  வேலைக்கு போட்டுக்கோங்க … “என்றாள் அம்மா, படபடப்பாய். 

“அப்படியா ரொம்ப சரிம்மா சந்தோஷம் ” என்றான் கோப மாய். நரியொன்று அவனுள் மெல்ல நுழைந்தது. அம்மா வை எரித்துவிடுவது போல் பார்த்தான்.  இவனோடு அங் கே வேலை பார்த்த   சரவண னை அழைத்து முகுந்னையும் கூட்டிக் கொண்டு கணக்கு வழக்குகள்  பார்க்க அறை க்குள் போனான் ஞானம் … 

இரவு மணி பத்து… பதினொ ன்று என நீண்டது. அம்மா மொட்டை மாடிப் படிக்கட்டு களில் காத்திருந்தாள் முகுந் தனுக்காக … சமயபுரம் மாரிய ம்மனுக்கு  முகுந்தனுக்கு கண் நன்றாக வேண்டும் என்றும் , ஒரு ஜோடி வெள்ளிக் கண்கள் வாங்கி சார்த்துவதாகவும் கண்ணீரோடு  வேண்டிக்  கொண்டாள் . 

மூன்று நாட்கள் , நான்கு நாட் களென கணக்கு பார்க்கும் படலம் அங்கே  நடந்தது.  அம் மாவும் சளைக்காமல்  இவ னோடு  ஆபீ ஸுக்கு வந்தாள். தனித்து இவனை அனுப்ப இஷ்டமில்லை,  அவளுக்கு.  ஒருமணி வரை ஒற்றையாய் அம்மா காத்திருப்பது சங்க டமாய் இருந்தது முகுந்த னுக்கு.

“அம்மா இங்கே வாங்க… கண க்கு வழக்கெல்லாம் ரொம்ப கச்சிதமா இருக்கு. இந்தாங்க இந்த மாதச் சம்பளம் “…என்று ரூபாய்  மூவாயிரத்தை முகுந் தன் தாயிடம் நீட்டினான் ஞா னம். 

அம்மா அந்தப் பணத்தை வாங்கி கண்களில் பக்தி யோடு ஒற்றிக்கொண்டாள். “இதை வெச்சு நல்ல கண் ஆஸ்பத்திரி போய் முகுந் தனை காண்பிக்க வேண்டும் என்று நினைத்தாள் .  ஞானம் ஏதோ ஞாபகம் வந்தவன் போல் சட்டென ஆவேசமாய் போய் பீரோ திறந்தான்…

“ஐயோ… இதுல இருந்த போன வார கலெக்ஷன் பணம் அஞ்சு லட்சம் எங்கே…? சரவணா நீ பாங்குல கட்டினியாடா…” என் றான் ஒன்றும்  தெரியாதவன் போல். 

” பீரோ ஒருவாரமா  திறக்கலை மொதலாளி ” என்று பயந்து கொண்டே முகுந்தனை பார்த் தான் சரவணன்…”

“அப்போ… அந்தப் பணம் கால் மொளைச்சு எங்கனா நடந்து போய் இருக்குமோ ? ” ஞானம் பல்கடித்து  பீரோவை ஓங்கி குத்தினான்.

“சாவிக்கொத்து , பணம் ரெண் டையும் உங்கள்ட்ட கொடுத் துவிட்டு தானே போனேன் என்றான் முகுந்தன். ஞானம் அவன் சொன்னதை கண்டு கொள்ளவில்லை….”

“யார் எடுத்தது… உண்மையை சொல்லுங்கடா… மன்னிச்சு விட்டுர்றேன். அஞ்சு நிமிஷம் டைம் தர்றேன். ஒரு ஆசையில

எடுத்திருக்கலாம். தப்பில்லை.

எடுத்து ஒளுங்கா கொடுத் துட்டு நடையை கட்டுங்க….” சொல்லிட்டேன், என்றான் புஸு புஸுவென்று மூச்சு வாங்க ஞானவேலு.

“சாமி சத்தியமா நான் பீரோ பக்கம் வரலை சார் “என்று அழு தான் சரவணன். “முகுந்தனும் எடுத்திருக்க மாட்டான் தம்பி. சந்தேகப்படாதீங்க… வேணா வீட்டுக்கு ஆள் அனுப்பி அங் குலம் அங்குலமா தேடிக் கோ ங்க…”  நிதானமா யோசிங்க தம்பி  என்றாள் அம்மா…அவள் வயிற்றை எதுவோ இம்சித் தது.

முகுந்தன் ஒன்றும் பேசாமல் சிலை போல் நின்றான்.அந்த நாடகத்தின் முடிவு …  போலீஸ் வைத்து மிரட்டல் , அடி ,உதை,  அவமானம் , பணியவைப்பது, மீண்டும் வேலைக்கு வரவ ழைப்பது என்று தன் பக்கம் எப்படியெல்லாம்  அரங்கேறும்  என்று அனுமானித்தான் . 

ஞானம் தனக்கு வேண்டியது கிடைக்க எந்த உச்சத்திற்கும் போவான். அலுங்காமல்  காய் நகர்த்தும் கலை அறிந்தவன், அவன். எல்லாம்  நன்றாகவே  புரிந்திருந்தது  முகுந்த னுக்கு….

“அம்மா, … வா போயிரலாம் கண்ணு ” எனக்கு ரொம்ப பய ம்மா  இருக்கு என்று அழத் துவ ங்கினாள். நரி அம்மா அழு கையை ரசித்து  சிரித்தது.

ஞானத்தின் கூலிப்படைகள் நாலு பேர் நல்ல குடிபோதை யில்,  அந்த அறையில் வேக 

 வேகமாய் நுழைந்தார்கள் . 

ஒரு உத்தரவு  அல்லது ஒரு சிறிய சைகைக்காக அவர்கள் அமைதி காத்துக் கொண்டிருப் பது கூட துல்லியமாய் புரிந் தது , முகுந்தனுக்கு. 

மீண்டும் வேலைக்கு வருவதை மட்டும் எக்காரணம் கொண் டும் ஒத்துக்கொள்ள கூடாது என்று திடமாய் நின்றான் முகுந்தன்.  

********************

Exit mobile version