சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வந்தாச்சு… உங்க ரிசல்ட்ட பார்த்துட்டீங்களா?

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

சிபிஎஸ்இ பிளஸ் 2  தேர்வில் 92.71% மாணவர்கள்  ஒட்டுமொத்தமாக தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவிகள் 94.54% மும், மாணவர்கள் 91.25%மும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் 98.82% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தையும், 98.16% தேர்ச்சியுடன் பெங்களூரு மண்டலம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. சென்னை 97.79% தேர்ச்சியுடன் மூன்றாமிடம் பிடித்துள்ளது.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை https://cbseresults.nic.in/class-twelfth/class12th22.htm சென்று தெரிந்து கொள்ளலாம்.

மேலும், தேர்ச்சி பெற்ற சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்கள் பொறியியல் & அரசு கலைக் கல்லூரிகளில் சேர ஜூலை 27ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தால்தான் முன்கூட்டியே சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version