பிரம்மாண்ட இயக்குனர் டைரக்டர் ராஜமவுலி தற்போது நடிகர் அவதாரம் எடுக்க தயாராக உள்ளார். இவரது இயக்கத்தில் வந்த பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி உலக அளவில் பல சாதனைகளை நிகழ்த்தியது. இன்னொரு படமான ஆர்ஆர்ஆர் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதையும் வென்றது. அடுத்து மகாபாரத கதையை பல பாகங்களாக திரைப்படமாக எடுக்கப்போவதாக அறிவித்து உள்ளார். இந்த நிலையில் ராஜமவுலி தற்போது நடிகர் அவதாரம் எடுத்து இருக்கிறார். பிரபல நிறுவனம் ஒன்றின் விளம்பர படத்தில் அவர் நடித்திருக்கிறார். அடுத்து திரைப்படத்தில் நடிக்கவும் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சில இயக்குனர்கள் தங்கள் படங்களில் நடிக்கும்படி ராஜமவுலியை அணுகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அவதாரம் எடுக்க தயாராகிய ராஜமௌலி
-
By mukesh

Related Content
கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்
By
daniel
December 17, 2025
ஒரே காரில் பயணித்த மோடி மற்றும் புடின்!
By
daniel
September 1, 2025
12000 பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்
By
nataraj
July 14, 2025
துணைக் குடியரசுத்தலைவர் புதுச்சேரி வருகை
By
daniel
June 13, 2025
வெள்ளி வென்ற நீரஜ்!
By
daniel
August 9, 2024
உத்திரகாண்ட்டிலும் உயர்ந்தது தக்காளியின் விலை
By
mukesh
July 7, 2023