உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதிக்கு ராகுல் காந்தி மீண்டும் செல்கிறார். ஏற்கனவே ஹத்ராஸ் செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் மீண்டும் பயணம் மேற்கொள்கிறார்.

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான ஒரு தலித் இளம்பெண், சமீபத்தில் உயர்சாதி வாலிபர்கள் 4 பேரால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடலையும் போலீசார் அவசர அவசரமாக தகனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\
இந்த குற்றசாட்டு தொடர்பாக ராகுல் காந்தி இந்த இடத்திற்கு விரைந்தார். அப்போது அவர் அங்குல போலீசாரால் தடுக்கப்பட்டார். அப்போது அவரின் தொண்டர்களையும் அவர் அழைத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றதால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறினார்கள். இதனை தொடர்ந்து இதனை பலரும் கண்டித்து வருகின்றனர். நேற்று இதனை கண்டித்து பாண்டிச்சேரி முதலமைச்சர் பெற்றதில் ஈடுபட்டார்.
இந்நிலையில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளான நேற்று அவரது கருத்தை நினைவுகூரும் வகையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த உலகத்தில் யாருக்கும் நான் பயப்பட மாட்டேன். எந்த ஒரு அநீதியான செயலுக்கும் தலைவணங்க மாட்டேன். உண்மையின் சக்தியைக் கொண்டு பொய்யை தோற்கடிப்பேன். பொய்க்கு எதிரான போரில் அனைத்து தடைகளையும் எதிர்கொள்வேன். காந்தி பிறந்த நாளில் இதயபூர்வமான வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதிக்கு ராகுல் காந்தி மீண்டும் செல்கிறார். ஏற்கனவே ஹத்ராஸ் செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் மீண்டும் பயணம் மேற்கொள்கிறார்.