மைனர் வயது உறவினர்களால் 5 மாதங்களாக பாலியல் பலாத்காரம்; 12 வயது சிறுமி கர்ப்பம்…

குஜராத்தில் 13 வயதுக்கு உட்பட்ட 2 சிறுமிகள் இரு வேறு சம்பவங்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர்.

குஜராத்தில் இரு வேறு சம்பவங்களில் 13 வயதுக்கு உட்பட்ட 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர்.  குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் விவசாய கூலி ஒருவரின் 12 வயது மகள் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.  அவரது உறவினர்களில் மைனர் வயதுடைய சிறுவன் வீட்டுக்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதன்பின்னர் இதுபற்றி அவன் தனது 2 உறவினர்களிடம் கூறியுள்ளான்.  அவர்களும் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.  அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது.  சிறுமியை தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில், சிறுமி 4 மாத கர்ப்பிணி என தெரிய வந்துள்ளது. இதன்பின்னர் வேறு மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.  இந்த தகவல் அறிந்து போலீசார் மருத்துவமனைக்கு சென்று சிறுமி மற்றும் பெற்றோரிடம் நடந்த விவரங்கள் பற்றி வாக்குமூலம் பெற்று கொண்டனர்.  3 சிறுவர்கள் மீதும் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.  தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய அவர்களை தேடி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து 21 வயது வாலிபரை பிடித்த போலீசார் அவருக்கு நடத்திய கொரோனா பரிசோதனை முடிவை அடுத்து இன்று கைது செய்துள்ளனர்.  சிறுமி மற்றும் வாலிபர் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது என போலீசார் கூறியுள்ளனர்.
குஜராத்தில் 13 வயதுக்கு உட்பட்ட இரண்டு சிறுமிகள் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version