13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த எண்ணூர் இன்ஸ்பெக்டர்

சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அதிரடியாக நேற்று கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக பாஜ செயற்குழு உறுப்பினரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னையில் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சபீனா என்பவர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மதன்குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா, மகேஷ்வரி, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகியோர் சேர்ந்து எனது 13 வயதான மகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர் என புகார் அளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 8 பேரையும் கைது செய்தார்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் 4 பேர் சேர்ந்து சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். மேலும் இதேபோல பல சிறுமிகளை அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கலாம் என்று சந்தேகித்தனர். இதனால் கைது செய்யப்பட்ட மதன்குமார், ஷாகிதா பானு, சந்தியா, மகேஷ்வரி, வனிதா, விஜயா ஆகிய 6 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில், இவர்களை தவிர முத்துப்பாண்டி, அன்சாரி பாஷா, அனிதா, மீனா, கார்த்திக், முஸ்தபா ஆகியோரும் புரோக்கர்களாக செயல்பட்டது தெரியவந்தது. இதனால் அவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனை அடுத்து நடைபெற்ற விசாரணையில் என்னுடைய அலுவலகத்துக்கு சிறுமியை அழைத்து வருவேன். அங்கு புகழேந்தியும் வருவார். அங்கு வைத்து இருவருமே சிறுமியுடன் உல்லாசமாக இருப்போம் என்று கூறினார். இதை தொடர்ந்து, இன்ஸ்பெக்டரை கைது செய்யலாமா, வேண்டாமா என்ற குழப்பம் போலீசாருக்கு ஏற்பட்டது. ஆனால், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், வடசென்னை கூடுதல் கமிஷனர் அருண் ஆகியோர் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

Exit mobile version