6 குழந்தைகள் உள்பட 14 பேரின் உயிரைக் குடித்த கோர விபத்து…

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

உத்திர பிரேதச மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் என்ற பகுதியில் நேற்று லாரியின் மீது ஒரு கார் மோதி விபத்துக்குள்ளானது. பிரயாக்ராஜ்-லக்னோ நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது. காரின் வேகம் மிக அதிகமாக இருந்ததால் வண்டி அதிக சேதாரம் ஆகியுள்ளது. மேலும் அதன் முன் பகுதி லாரிக்குள் சிக்கிக்கொண்டது.

விபத்து நடந்த இடத்தில இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கேஸ் கட்டர் உதவியுடன் காரின் பாகங்களை வெட்டி எடுத்து உள்ளே இருந்தவர்களை சடலமாக மீட்டனர். வேகமாக சென்று மோதியதில் வண்டியில் இருந்த ஆறு குழந்தைகள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Exit mobile version