தமிழக மீனவர்கள் மேலும் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது…

நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மேலும் 14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டத்தின் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.தற்போது மீன்பிடிக்கலாம் என விசைப்படகை எடுத்துக்கொண்டு கடலுக்கு சென்று உள்ளனர். அதன்படி நேற்று மதியம் தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர்கள் பாண்டியன் என்பவருடைய படகு மூலம் முத்துலிங்கம் (வயது 28), ராஜூ, ரஞ்சித், முருகன் ஆகிய 4 பேரும் கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இன்று காலை படகில் மீன் பிடித்துகொண்டு இருந்த நான்கு பேரை எல்லைதாண்டி மீன் பிடிக்க வந்தவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் மேலும் பதினான்கு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் அட்டூழியத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version