மக்களிடம் ரூ.150 கோடி மோசடி: கேரளாவில் எம்எல்ஏ கைது…

மக்களிடம் ரூ.150 கோடி மோசடி செய்த கேரளா எம்எல்ஏ கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், மஞ்சேஸ்வரம் தொகுதியில் முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏ.வாக இருப்பவர் கமருதீன். இவர் உட்பட முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த சிலர், காசர்கோடு, கண்ணூர் மாவட்டங்களில், ‘பேஷன் கோல்டு’ என்ற பெயரில் நகைக்கடை தொடங்கினர்.

பின்னர், இவற்றில் பங்குதாரர்களாக சேர்ப்பதாக கூறி, 800-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்தனர். 3 ஆண்டுகளாகியும் பங்குதாரர் பணத்தை தரவில்லை. இது பற்றி நூற்றுக்கு மேற்பட்டோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், எம்எல்ஏ கமருதீனை நேற்று கைது செய்தனர்.

Exit mobile version