சென்னை விமான நிலைய கழிவறையில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலைய கழிவறையில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரையும் சோதனை செய்வது வழக்கம் மேலும் அவர்களுள் பலர் கஞ்சா,தங்கம் போன்ற கடத்தல் வழக்கில் பிடிபடுவதும் வழக்கம் தான். அனால் இம்முறை சற்று வித்யாசகம நடந்துள்ளது. சென்னை விமான நிலைய கழிவறையில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

விமான நிலையத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தின் மதிப்பு ரூ.2 கோடி ஆகும். மொத்தம் 3.7 கிலோ தங்கம் கழிவறையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தங்கத்தை துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தவர் தப்பி ஓட்டம் என தெரியவந்துள்ளது அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version