சேலத்தில் தொடர் பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்ட சிறுமிகள் கோர்ட் நீதிபதியிடம் 2 சிறுமிகள் ரகசிய வாக்குமூலம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனாம் பாளைம் எனும் ஊரை சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் சேலம் சுக்கம்பட்டியில் குத்தகைக்கு நிலத்தை எடுத்து விவசாயம் செய்ததுடன், மாட்டுக்கு தீவனம் விற்க்கும் தொழிலும் செய்துள்ளார். மேலும் இவர் தனது தோட்டத்தில் வேலை செய்த 15 மற்றும் 13 வயதுடைய சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அம்மாப்பேட்டை மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அந்த சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்பின் நாமக்கல்லில் இந்த சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலி மந்திரவாதியும் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து சிறுமிகள் இருவரும் சேலம் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சேலம் கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி முன், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளும் நேற்று முன்தினம் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்ற கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டது. அப்போது தங்களுக்கு நடந்த கொடுமைகளை அதிர்ச்சியுடன் நீதிபதியிடம் கூறினார். பின்னர் அவர்கள் தங்கி இருந்த விடுதிக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரவீந்திரனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.