சென்னையின் பல்வேறு இடங்களுக்கு கஞ்சா விநியோகம் செய்து வந்த ஆந்திராவை சேர்ந்த 2 பேர் கைது…

சென்னையின் பல்வேறு இடங்களுக்கு கஞ்சா விநியோகம் செய்து வந்த ஆந்திராவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடி போதைக்கு அடிமையாக இருப்பது போலவே பலரும் கஞ்சா எனும் போதைப்பொருளுக்கும் அடிமையாக உள்ளனர். அனால் சாராயத்தை போல கஞ்சாவானது அரசாங்கத்தால் விற்கப்படாது. மேலும் இதனை விரிப்பது வாங்கி பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றம். அனால் ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது என்ற பழமொழிக்கு உயிர் கொடுப்பது போல இந்த தீய இலைக்கு அடிமையானவர்கள் இதனை வாங்கி பயன்படுத்தி கொண்டு தான் இருக்கின்றனர்.

கஞ்சா செடியை வளர்ப்பது சட்டபடி குற்றம் ஆதலால் இந்த போதை பொருளை மற்ற மாநிலங்களில் இருந்து மற்ற மாவட்டங்களில் இருந்தோ கொண்டு வந்து விரிப்பது வழக்கம். இவர்கள் தன் வெளியை செய்யும்போது போலீஸ் மட்டும் சும்மா இருக்குமா என்ன. அவர்களும் இதோ சட்டவிரோதமான காரியங்களை ஈடுபடுபவர்களை கைது செய்து தான் வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீராம் பரத்வாத், தாசரி சரண்குமார் ஆகியோர் சென்னையில் கையும் கஞ்சாவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர்களிடமிருந்து ஒரு கார், 2 செல்போன்கள், ரூபாய் 30 ஆயிரம் பணம் மற்றும் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Exit mobile version