கிழக்கு கோதாவரி அருகே கிராமத்தில் புகுந்த 20 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
வனப்பகுதியில் அரிய வகை உயிரினங்கள் வாழ்வது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த அரிய வகையான உயிரினம் தற்போது குடியிருப்பு பகுதியை நோக்கி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் சிந்தூரு மண்டலத்தை சேர்ந்த மோட்டுகூடம் கிராமம் அருகே 20 அடி நீளமுள்ள ராஜ நாகம் இருப்பதாக வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர்.
கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் ராஜநாகத்தை பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவித்தனர். சர்வ சாதாரணமாக கிராமத்தில் புகுந்த 20 அடி நீள ராஜநாகத்தை பார்த்த மக்கள் புல்லரிப்பில் உள்ளனர்.