தமிழகத்தில் ” ரூ.200 ” வெளியில் போகும் போது மறந்துராதீங்க… அரசு அதிரடி உத்தரவு…!!!

200 Indian rupees, new notes.

ஈரோடு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், தஞ்சை, திருப்பூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரே தெருவில் மூன்று நபர்களுக்கு மேல் இருந்தால் அந்த தெருவை நோய் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் முக கவசம் அணியாதவர்களிடம் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சமூக இடைவெளி கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version