2000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டி விலை ரூ.7.70 லட்சம்…

2000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டி விலை ரூ.7.70 லட்சம்: சமூக வலைதளங்களில் படம் வைரல்: திருப்பூர் அதிமுக எம்.எல்.ஏ. அலறல்…

திருப்பூரில், 50வது வார்டில் அமைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியின் திட்ட மதிப்பீடு ரூ.7.70 லட்சம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை திறந்து வைத்த திருப்பூர் தெற்கு அதிமுக எம்.எல்.ஏ, ‘நான் திறப்பாளர்  மட்டுமே’ என அலறி உள்ளார்.திருப்பூர் மாநகராட்சியின் 50வது வார்டு 1வது வீதியில் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டது.

இதனை கடந்த 7ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. குணசேகரன் திறந்து வைத்தார். அந்த தொட்டியில் திட்ட மதிப்பீடாக ரூ.7.70 லட்சம் என எழுதப்பட்டிருக்கிறது. சாதாரண பிளாஸ்டி தண்ணீர் தொட்டியின் விலை ரூ.7.70 லட்சமா? என்ற வினாவுடன், அதிமுக அரசின் ஊழல் குறித்த விமர்சனங்களும், திட்ட மதிப்பீட்டை வைத்து  பல மீம்ஸ்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுபற்றி, தண்ணீர் தொட்டியை திறந்து வைத்த எம்.எல்.ஏ. குணசேகரன் கூறியதாவது:-
நான் திறப்பு விழாவிற்கு மட்டும்தான் சென்றேன்.

தொட்டியின் அருகில் செல்லவில்லை. குடிநீர் குழாய் வரும் இடத்தில் மட்டுமே சென்று திறந்து வைத்தேன். ஆகையால், எனக்கு தெரியவில்லை. அது எனது நிதியில் இருந்து கட்டப்படவில்லை. பொது நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ளது. நான்  திறப்பாளர் என்கிற முறையில் சென்று திறந்து வைத்தேன். என்ன வேலைக்காக எவ்வளவு திட்டமதிப்பீடு செய்யப்பட்டது என்ற விளக்கத்தை தண்ணீர் தொட்டி அருகே வைக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறி உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Exit mobile version