ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் ரூ. 20000 கள்ளநோட்டு டெபாசிட்…

வங்கியில் ரூ. 20000 கள்ளநோட்டு டெபாசிட் செய்தவர் கைது.

கோவை வடவள்ளியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளது. இந்த வங்கியில் மேலாளராக வேலை பாத்து வருபவர் கோகுல்நாத். இவர் நேற்று தன் வங்கியில் அருகில் உள்ள காவல் துறையில் வங்கியில் ரூ.20,000 கள்ளநோட்டை டெபாசிட் ஆகியுள்ளது என புகார் அளித்துள்ளார்.

இவர் வேலை செய்து வரும் ஐ.சி.ஐ.சி.ஐ. எனும் வங்கியில் நேற்று வாங்கிக்கு வந்தவர்களில் ஒருவர் ரூ.20,000 கள்ளநோட்டை டெபாசிட் செய்துள்ளது தெரியவரவே இவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக கள்ளநோட்டை டெபாசிட் செய்த நீலகிரியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மர்ம நபருக்கு பின்னால் யார் யார் இருக்கின்றனர் என்பதை குறித்து விசாரணை நடந்து வருகின்றது.

Exit mobile version