இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும், ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜப்பானில் ஆளும் கட்சித் தலைவரான டோஷிஹிரோ நிகாய் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் உலக நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் பரவல், அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மோசமான சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது .
தற்போது டோக்கியோவில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்த ஆண்டு வருகின்ற ஜூலை மாதம் ,டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கு, அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடு முயற்சிகளை நடத்தி வருகிறது.
ஆனால் தற்போது இந்த போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்பு சற்று குறைந்து காணப்படுவதாக கூறியுள்ளார் .
இதுபற்றி அங்குள்ள கியோடோ நியூஸ் என்ற நிறுவனம் கருத்துக்கணிப்பு கேட்டபோது ,பெரும்பாலானோர் ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்வதற்கு அதிகளவு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.