பாராளுமன்ற தாக்குதலின் 20ம் ஆண்டு நினைவு தினம்… பிரதமர் மோடி ட்வீட்!!


பாராளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு தேசம் என்றும் நன்றியுடன் இருக்கும் – பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் டுவிட்டரில் பதிவு.

டெல்லி, இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்று 20 ஆண்டுகள் இன்றோடு முடிகிறது; கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி மக்களவை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டு இருக்கும் போது லஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Taiba) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammad) பயங்கரவாதிகள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட தற்கொலைத் தாக்குதல் படையினர் நாடாளுமன்ற வாளாகத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலை தடுக்க முயன்றபோது டெல்லி காவல்துறையின் 5 பாதுகாப்புப் பணியாளர்கள், சிஆர்பிஎப்-ன் ஒரு பெண் கான்ஸ்டபிள் மற்றும் நாடாளுமன்ற கண்காணிப்பு பிரிவின்2 பாதுகாப்பு உதவியாளர்கள் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடந்து 20 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்று நாடாளுமன்ற வாளாகத்தில் தாக்குதல் போது உயிரிழந்த பாதுகாப்பு வீரர்களுக்கு காலை 10.30 மணிக்கு நினைவஞ்சலி கூட்டம் நடைபெறவுள்ளது.

முன்னதாக, டுவிட்டரில் பதிவிட்டுள்ள குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் :
“நாட்டின் மிக பெரிய ஜனநாயக நாடாளுமன்றத்தில் நடந்த கொடூர தாக்குதலின் போது உயிரிழந்த துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதாகவும், வீரர்களின் உன்னத தியாகத்திற்கு தேச எப்போதும் நன்றி செலுத்தும்” என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், பிரதமட் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது,
2001 பாராளுமன்ற தாக்குதலின் போது உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி கொள்வதாகவும், நாட்டிற்கு அவர்கள் செய்ய தியாகம் இன்றையளவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஊக்கம் அளிப்பதாக பதிவிட்டுள்ளார்.

இதேபோல், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா,நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் 2001 தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Exit mobile version