அயன் படத்தில் வருவது போல நிஜத்தில் செய்து மாட்டிக்கொண்டவர்கள்… சென்னை விமானநிலையத்தில் 3000 போதை மாத்திரைகள் பறிமுதல்…

சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்த முயன்ற 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மருந்து விற்பனையாளரை அதிகாரிகள் கைது செய்தனர்.

போதைப்பொருள் கடத்துவது தமிழ் சினிமாவில் பெரிதும் ரசித்து பார்க்கப்படும் ஒரு காட்சி. அனால் அதை பார்ப்பதோடு விட்டுவிடாமல் இங்கு சிலர் செயலில் ஈடுபட்டு போலீசிடம் மாற்றிக்கொண்டனர்.

மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்ககப்பிரிவில் இருந்து அமெரிக்க நாட்டிற்கு அனுப்புவதற்காக பார்சல்கள் வந்திருந்தன. இந்த பார்சல்கள் மூலம் பெரும் அளவு போதை மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து அதிகாரிகள் அனைவரும் சோதனை செய்ய புறப்பட்டபோது அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாண முகவரிக்கு அனுப்புவதற்கு மருந்துவ பொருட்கள் என்று ‘ஸ்டிக்கர்’ ஒட்டி பார்சல் ஒன்றை சதேகத்தின் பேரில் ஆராய்ந்து பார்க்க அதில் போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளான மெத்தில்பெனிடெட், சோல்பிடெம் மற்றும் குளோனாசெபம் ஆகிய பெயர்களை கொண்ட 3 ஆயிரத்து 440 மாத்திரைகள் மறைத்து வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் அதன் மதிப்பு ரூ.5 லட்சம் வரை இருக்கலாமா என கூறப்படுகிறது.

இது தொடர்பாக சென்னையை சேர்ந்த 30 வயது வாலிபரை கைது செய்தனர், மேலும் விசாரணை தொடர்ந்து வருகின்றது.

Exit mobile version