ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் 4 பேர் கைது செய்யபட்டனர்.
இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு ஒரு நல்ல வரவேற்பு இருக்கின்றது. ஆனால் அதனை பல பேர் தவறுதலாக பயன்படுத்தி வருகின்றனர். ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்ந்து முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் சென்னையில் கூட ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்ட மகன் மற்றும் தந்தை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னை சவுகார்பேட் பகுதியில் , ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து ஆன்லைன் சூதாட்டம் நடைபெறுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு போலீசார் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சூளையை சேர்ந்த மையூர், ஏழுகிணறு சேர்ந்த பங்கஜ், பொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த சந்தீப் குமார், தீரஜ் ஆகிய 4 பேரை கைது செய்யப்பட்டனர்.
இவர்களை விசாரித்தபோது இவர்கள் நால்வரும் பிரத்யேகமாக செயலி ஒன்றினை வடிவமைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்காக பயன்படுத்தப்பட்ட செல்போன், மடிக்கணினிகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.