ஆனைமலை அருகே தனியார் குடோனில் 45 டன் மானிய விலை யூரியா பதுக்கல்

ஆனைமலை அருகே தனியார் குடோனில் 45 டன் மானிய விலை யூரியா பதுக்கிராயவர்கள் கைது.

வேளாண்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் யூரியா வழங்கப்படும். அதனை சட்டவிரோதமாக கடத்தி கேரளாவிற்கு கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து பொள்ளாச்சியில் நடந்து வருகின்றது. இதையடுத்து, பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் தமிழக -கேரளா எல்லையில் சோதனை நடத்தி வந்தனர். . இந்நிலையில், கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள கணபதிபாளையத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் யூரியாவை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருப்பதாக வருவாய்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்திநாதன், ஆனைமலை தாசில்தார் வெங்கடாச்சலம் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் அனைவரும் நேற்று அந்த தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது அது ஒரு பசை தயாரிக்கும் நிறுவனம் என்றும் இது போல மானிய விலையில் கிடைக்கும் யூரியாவை கடத்தி அதில் ரசாயனம் கலந்து பசை தயாரிக்கின்றனர் என்பது தெரிய வந்தது.

இதுபோக மிச்சத்தை கேரளாவுக்கும் கடத்துவது தெரிந்தது. இதனை தொடர்ந்து கோடௌனில் பதுக்கி வைத்திருந்த சுமார் 45 டன் மானிய விலை யூரியாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், குடோனுக்கு சீல் வைத்தனர். மேலும் கோடௌன் உரிமையாளர் மீதும், கேரளா முஸ்தபா மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Exit mobile version