ரூ.4 கோடி மதிப்பிலான வெங்காய பதுக்கல் தொடர்பாக 5 பேர் கைது…

பெரம்பலூரில் ரூ.4 கோடி மதிப்பிலான வெங்காய பதுக்கல் தொடர்பாக 5 பேர் கைது.

பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் வியாபாரி பாலாஜி என்பவர். இவரை தற்போது திருச்சி குடிமைப்பொருள் வழங்கும் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது. இதற்கு காரணம் இவர் வெங்காயம் பதுக்கலில் ஈடுபட்டது தான். இந்நிலையில் இதேபோல் வெங்காய கடத்தலில் ஈடுபட்ட மற்றொரு வியாபாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து அவரை விசாரித்ததில் அவரது பெயர் வடிவேல் என்றும் மேலும் ஐந்து பேர் இந்த வெங்காய பதுக்கலில் ஈடுபட்டு இருந்ததாகவும் கூறினார். பின்னர், அவர் கூறிய அந்த ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது 5 நாள் காவலில் வைக்க பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்ற உத்தரவின் பேரில் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Exit mobile version