5G நெட்வொர்க் சோதனை வெற்றி… 4G-யை விட 50 மடங்கு வேகம் அதிகம்

பெங்களூரு எம்.ஜி மெட்ரோ ரயில் நிலையத்தில் 5ஜி சேவை நெட்வொர்க் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இது 4ஜி சேவையுடன் ஒப்பிடும்போது 50 மடங்கு வேகமாகும்.

இந்தியாவில் 4ஜி சேவை நடைமுறையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக 5ஜி சேவையை கொண்டு வருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஏனெனில், 5ஜி சேவை நடைமுறைக்கு வந்தால் நாட்டின் பொருளாதார மதிப்பு அடுத்த 15 ஆண்டுகளில் ₹35 லட்சம் கோடி அளவுக்கு வளர்ச்சி காணும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் (டிராய்) மூலம் பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 5ஜி சேவை சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிபெற்றது. இது தொடர்பாக பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “5ஜி இணைய நெட்வொர்க் சோதனையில் பதிவிறக்க வேகம் 1.4 Gbps மற்றும் பதிவேற்ற வேகம் 65Mbpsம் இருந்தது. இது 4ஜி இணையத்தை விட 50 மடங்கு வேகமாகும். இந்த 5ஜி நெட்வொர்க் ஸ்டேஷனை சுற்றி 200 மீட்டர் சுற்றளவில் இருக்கும்.கடந்த 2013ம் ஆண்டு நம்ம மெட்ரோதான் வாடிக்கையாளர்களுக்கு முதன்முதலில் இணைய சேவையை வழங்கியது. பின், முதல் நடவடிக்கையாக, பைப்பனஹள்ளி மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் எம்ஜி சாலை மெட்ரோ நிலையம் இடையே பயணிக்கும் மெட்ரோ ரயிலில் இணைய வசதி வழங்கப்பட்டது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version