பிரிட்டனில் ஒருவகை சிக்கன் தயாரிப்புகளை சாப்பிட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் கடந்த வருடம் ஐந்து நபர்கள் குறிப்பிட்ட வகை சிக்கன் தயாரிப்புகளை சாப்பிட்டதால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான நபர்கள் உடல்நிலை மோசமடைந்து நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதாவது அந்த சிக்கன் தயாரிப்புகளில் நோய் தாக்கிய கோழிக்கறி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
போலந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழிகளில் குறைந்த விலையுடைய சிக்கன் கட்லெட் போன்ற சாப்பாடு வகைகளை தயாரித்து பிரிட்டனில் இருக்கும் பல்வேறு பல்பொருள் அங்காடிகளில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 480 நபர்கள் இந்த சிக்கன் தயாரிப்புகளை சாப்பிட்டதால் சால்மோனெல்லா என்ற ஒரு வகை நோய்க்கிருமி தாக்கி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்களில் மூன்றில் ஒருவரின் நிலை மிகவும் மோசமடைந்து காணப்படுவதால் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.அதாவது இது போன்ற சிக்கன் தயாரிப்புகள் குறைந்த விலையில் இருப்பதால் பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்திருக்கின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களில் 44% நபர்கள் பதினாறு வயதும் அதற்கு குறைவான வயதுடையவர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் இதுபோன்ற சிக்கன் தயாரிப்புகள் கேஎஃப்சி சிக்கனை நினைவுபடுத்துவதாலும் குறைந்த விலையில் கிடைப்பதாலும் அதிக மக்கள் ஆர்வத்துடன் வாங்கியதாக கூறப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்த பிறகு உணவு தரக்கட்டுப்பாடு ஏஜென்சி SFC நிறுவனத்தின் இரண்டு தயாரிப்புகள் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிக்கன் தயாரிப்புகளில் சிலவற்றை திரும்ப பெறுவதற்கு உணவு தரக்கட்டுப்பாடு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.