மாணவிக்கு பாலியல் தொல்லை! – 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த மகிளா நீதிமன்றம்…

மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் தாஞ்சூர் அருகே இலக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் செல்வகுமார். அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவியைப் பின் தொடர்ந்து தனக்கு முத்தம் கொடுக்கச் சொல்லித் தொடர்ந்து டார்ச்சர் செய்துள்ளார்.

அதோடு, பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், மாணவியைத் தனக்குத் திருமணம் செய்து வைக்காவிட்டால்,சினிமா பாணியில் சிறுமியைக் கடத்திச் சென்று விடுவேன் என்று சிறுமியின் பெற்றோரை செல்வக்குமார் மிரட்டியுள்ளார்.

காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி, செல்வக்குமாரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணையானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு இறுதி விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, குற்றவாளியான செல்வக்குமாருக்கு 5ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால் ஒரு மாத சிறைத் தண்டனை எனத் தீர்ப்பு வழங்கினார்.

Exit mobile version