தமிழகத்தில் இன்னும் 3 மணி நேரத்திற்குள்… மக்களே அலர்ட்டா இருங்க….!!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த வருடம் பருவம் தவறி கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மழை பெய்ய தொடங்கியதால் பெருமளவு சேதம் ஏற்பட்டது. அதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

அதுமட்டுமன்றி பெரும்பாலான மக்கள் புயல் காரணமாக தங்கள் வீடுகளை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். அதன் பிறகு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில்,

அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரி கடல் முதல் வடக்கே உள்ள பகுதி வரை வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு நிலவும் காற்றின் சுழற்சியால், நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version