இலங்கைக்கு கடத்திய 6 டன் மஞ்சள் சிக்கியது கடத்திய 6 பேர் கைது மற்றும் 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மன்னார் வளைகுடா இந்திய கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நடுக்கடலில் வந்த 2 படகுகளை மறித்து சோதனையிட்டனர். இதில் 6 டன் மஞ்சள் மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த கடற்படையினர், படகில் இருந்த தூத்துக்குடி கீழ வைப்பாறு பகுதியை சேர்ந்த அந்தோணி கின்சான், பின்சில்யாஸ், சுபாஷ், பியூனோ மற்றும் 2 இலங்கை மீனவர்களை கைது செய்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்திய பாம்பன் மற்றும் இலங்கையை சேர்ந்த 2 பைபர் படகுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புலனாய்வு துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடுக்கடலில் 6 டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.