தொடர்ந்து 8 திருமணங்கள்…மனைவி மற்றும் மகளை மிரட்டி பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்திய சம்பவம்…

தொடர்ந்து 8 திருமணங்கள் மனைவி மற்றும் மகளை மிரட்டி பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் அடுத்தடுத்து 8  திருமணங்கள் செய்து கொண்ட நபர் சொந்த மகள் மற்றும் மனைவியை மிரட்டி பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு பாலியல் தொழில் மற்றும் போதை மருந்து கும்பலுடன் தொடர்புள்ளது. கத்தி மற்றும் துப்பாக்கியை காட்டி மிரட்டி பெண்களை தமக்கு பணிய வைத்துள்ளனர். தனது முதல் தாரத்தின் மகளை பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

தனது முதல் மனைவி கீதாஞ்சலி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட லட்சுமி ஆகியோரை கொலை செய்து விடுவதாக மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியுள்ளார். அருண் குமார் மொத்தம் 8 திருமணம் செய்து கொண்டதுடன் அனைவரையும் மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுப்பட கட்டாயப்படுத்தி வந்துள்ளனர்.  ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கீதாஞ்சலி மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் கடந்த மாதம் போலீசார் அணுகி கணவன் அருண் குமார் பெயரில் புகார் அளித்துள்ளனர். கணவரால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூர் போலீசாருக்கு அருண் குமாருக்கு தொடர்பு இருப்பதால் அருண் குமார் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளனர். கீதாஞ்சலி மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் மகளிர் ஆணையம் முன்பு தங்கள் குற்றச்சாட்டை  முன்வைத்துள்ளனர். அருண் குமாரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பேசி பதிவு செய்த ஆடியோ செய்தியையும் போலீசாருக்கு அனுப்பியுள்ளனர். உள்ளூர் போலீசார் அருண்குமார் மீது வழக்கு பதிய முன்வந்துள்ளனர். அருண் குமார் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் மனிஷ் குமார் உத்திரவிட்டுள்ளார். 

Exit mobile version