சவுதி அரேபியா 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை இந்தியாவிற்கு கொடுத்து உதவியுள்ளது.
உலகில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியா சாவின் பிடியில் சிக்கிக்கொண்டு தவித்து வருகின்றது. மேலும் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் படுக்கைகள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் பலியாக நேரிடுகிறது.
அதனால் நாட்டில் தேவைப்படும் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு பிரித்தானியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளை நாடியுள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவும் இந்தியாவிற்கு ஆதரவு தந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை 4 கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் மூலம் கப்பலில் சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் டுவிட்டரில் செய்தி ஓன்று வெளியிட்டுள்ளது. அதில் “சவுதி அரேபிய ராஜ்யத்தின் ஆதரவு, உதவி மற்றும் ஒத்துழைப்புக்கு இந்தியாவின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளது