தினமும் 9 மணிநேரம் தூங்கினால் ரூபாய். 1 லட்சம் சம்பளம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் wakefit நிறுவனம் தினமும் தூங்குவதற்காக ஒரு லட்சம் சம்பளம் அறிவித்துள்ளது. 100 நாட்களுக்கு தினமும் இரவில் குறைந்தது ஒன்பது மணி நேரங்கள் தூங்கினால் ரூபாய் ஒரு லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது .
பெங்களூரை சேர்ந்த wakfit நிறுவனம் மக்களின் தூக்கம் முறைகளை ஆய்வு செய்வதற்காக இந்த ஸ்லீப் இன்டர்ன்ஷிப்பை அறிவித்துள்ளது. மற்றவர்களை விட அதிகமாக தூங்குபவர்கள் sleep champion of india பட்டத்தை வெல்லலாம். அவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும். இந்த இணைப்புக்கு ஏற்கனவே மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் படுக்கைக்கு செய்து 10 முதல் 20 நிமிடங்களுக்குள் தூங்க வேண்டும் என இதுபோன்ற சில தகுதிகள் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இன்டர்ன்ஷிப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு மெத்தை மற்றும் ஒரு கண்காணிப்பு கருவி வழங்கப்படும் நீங்கள் எவ்வளவு நேரம் தூங்கி கொண்டு இருந்தீர்கள் என்பதை இது உங்களுக்கு தெரிவிக்கும்.