’94’ யூட்யூப் சேனல்கள் முடக்கம்… மத்திய அரசு அறிவிப்பு

கடந்த 2021-2022ம் ஆண்டில் போலி செய்திகளை வெளியிட்ட 94 யூட்யூப் சேனல்களையும், 19 சமூக வலைதள கணக்குகளையும் முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேற்று (ஜூலை 21) ராஜ்சபாவில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் பதிலளித்தார். அதன் விவரம்: நாட்டின் இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளையும், தவறான பிரசாரங்களையும் செய்யும் அமைப்புகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், 2021-2022 காலக்கட்டத்தில் தவறான தகவல்களையும், போலி செய்திகளையும் வெளியிட்ட 94 யூட்யூப் சேனல்கள், 19 சமூக வலைதள கணக்குகள் உள்பட 747 வலைதள முகவரிகள் முடக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69-ஏ பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், கொரோனா தொடர்பான போலி செய்திகளை கண்டறிந்து உண்மை தகவல்களை தெரிவிக்க பத்திரிகை தகவல் மையத்தில் தனிபிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவு 34,125 விசாரணைகளுக்கு பதில் அளித்துள்ளது.சமூக வலைதளங்களில் வெளியான 875 போலி செய்திகளையும் அம்பலப்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version