’96 ’திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஓவர்….டிரெண்டிங் ஆகும் ஹேஸ்டேக்…

’96’ திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆனதையொட்டி ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலான பல்வேறு ஹிட் படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளவர் நடிகை திரிஷா. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த படம் 96.

இப்படத்தை இயக்குநர் பிரேம்குமார் இயக்கினார்.. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் பெரும் வெற்றி பெற்றது.

மற்ற மொழிகளும் போட்டி போட்டுக்கொண்டு ரீமேக் செய்து அசத்தினார்கள்.

இந்நிலையில் இப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி சமூக வலைதளங்களில்  விஜய்சேதுபதி மற்றும் திரிஷாவின்  ரசிகர்கள் ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெளியானதையொட்டி ரசிகர்கள் ராம், ஜானு குறித்து தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்

Exit mobile version