மதுரை அருகில் கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் கைது…

மதுரை அருகில் கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் கைது செய்யப்பட்டார்.

கஞ்சா விற்பனை தற்போது களைகட்டி வருகிறது என்று சொல்லலாம். தோண்ட தோண்ட வரும் தண்ணீர் போன்று கண்டு பிடிக்க கண்டு பிடிக்க கஞ்சா விற்பனையாளர்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றனர். இவர்களை ஒழிக்க காவல் துறையினரும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.சந்தேகம்படும்படி யாரவது இருந்தாள் அவர்களை உடனே பிடித்து விசாரணையும் நடத்துகின்றனர். அதுமட்டுமின்றி யாரிடமிருந்தாவது தகவல் கிடைத்தால் உடனே அங்கு சென்று சோதனை போடுகின்றனர்.

தற்போது ஆண்களுக்கு பெண்கள் நிகர் என்று காட்ட, இந்த கஞ்சா விற்பனையையும் சில பெண்கள் கையில் எடுத்துள்ளனர். இவர்களை எல்லாம் போலீசார் வலைவீசி தேடிவந்துள்ளனர். இந்நிலையில் கஞ்சா விற்பனை செய்த ஆதிசிவப்பிரியாவிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தில் வீட்டிலேயே கஞ்சா விற்பனை செய்து வந்ததாக தகவல் கிடைக்கவும் அங்கு விரைந்து சென்ற போலீசார் அங்குள்ள வீட்டை சோதனை செய்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்வது ஊர்ஜிதமாகவே அங்கு இருந்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.

Exit mobile version