சென்னையில் வீடு புகுந்து துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர்

சென்னை பெரம்பூரில் வீடு புகுந்து துப்பாக்கியை காட்டி பெண்ணை மிரட்டிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சென்னை பெரம்பலூரில், பட்டேல் நகரில் பட்டப்பகலில் ஓர் மர்ம ஆசாமி ஒரு வீட்டிற்குள் சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த பெண் அவரிடமிருந்து தப்பி வெளியே வந்து கூச்சலிட்டு அக்கம்பக்கதினரை அழைத்துள்ளார். அனைவரும் ஒன்று திரண்டு அந்த திருடனை பிடித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்க்கு விரைந்த செம்பியம்போலீசார் அவரை சுற்றிவளைத்தனர். அவரை விசாரித்தப்போது அந்த துப்பாக்கி ஆசாமி வியாசர்பாடி, சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (32) என்பதும் இவர் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்வதும் தெரியவந்துள்ளது. 

மேலும் இவர் பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் குடிபோதையில் இருந்துள்ளார். அவரிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார் நடமாட்டம் அதிகம் மிகுந்த பகுதியில் அசல் துப்பாக்கியா அல்லது போலி துப்பாக்கியா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த துப்பாக்கி பற்றி கூறுகையில் அது பார்ப்பதற்க்கு சிகிரெட் லைட்டர் போன்று இருப்பாதகவும். இதனை அவர் நண்பரான சிவா என்பவரிடமிருந்து பெற்றதாகவும் கூறுகிறார் காவல் துறை அதிகாரி.

Exit mobile version