கடற்கரையில் ஒதுங்கிய கண்ணிவெடி.. விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள்

அமெரிக்காவின் கடற்கரையில் ஒதுங்கிய கண்ணிவெடிகுண்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா கடற்கரையில் ஒரு பொருள் கரையொதுங்கியுள்ளது. அந்த பொருளை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பதறிக்கொண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதாவது அந்த மக்கள் கடலுக்கு அடியில் பயன்படுத்தக்கூடிய கண்ணிவெடியை தான் பார்த்துள்ளார்கள்.

இதனால் உடனடியாக அந்த பகுதிக்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர். அதன் பின் அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், அது போலியானது என்று தெரியவந்துள்ளது. அதாவது வெடிமருந்து நிரப்பப்படாமல் கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய கண்ணிவெடி அது.

ஆனால் அதனை அறிவதற்குள் அந்தப்பகுதியே பெரும் பரபரப்பானது. வெடிகுண்டு நிபுணர்கள் அதனை சோதித்து அதனால் எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்று கூறிய பின்பு தான் கடற்கரைப்பகுதி மீண்டும் அமைதி நிலைக்கு திரும்பியிருக்கிறது. மேலும் அந்த வெடிகுண்டு அதிகாலை நேரத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதால் கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டம் அவ்வளவாக இல்லை. எனினும் அந்த வெடிகுண்டு திடீரென்று அந்த பகுதிக்கு வந்தது எப்படி? என்ற மர்மம் நீடிக்கிறது.

Exit mobile version