இனி டெக்னாலஜி முறையில் லட்டு!

திருப்பதி கோவிலில் லட்டு வாங்க இனி கீழ்கண்ட நடைமுறையைப் பின்பற்றலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

திருப்பதிக்கு சென்று விட்டு லட்டு சாப்பிடாமல், லட்டு வாங்காமல் வந்தால் வெங்கடாசலபதியின் அருள் பூரணமாய்க் கிடைக்காது. அந்தளவிற்கு ஆன்மீகத்திற்குள் லட்டு பின்னிப் பிணைந்துள்ளது. பக்தர்களின் பெருங்கூட்டம் லட்டை வாங்காமல் செல்லக் கூடாது என உறுதியோடு வந்து செல்வதால்க கூட்டத்திற்கு எப்போதுமே பஞ்சமிருக்காது. லட்டு கவுண்டர்களில் கூட்ட நெரிசல் மற்றும் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் வகையில் QR CODE முறையில் லட்டு வாங்கும் 5 இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் தங்கள் தரிசன டிக்கெட் எண் அல்லது ஆதாரை இயந்திரத்தில் உள்ளிட்டு, லட்டுக்களின் எண்ணிக்கையைத் தேர்வு செய்த பின்னர் யுபிஐ மூலம் பணம் செலுத்தி பெறும் ரசீதைப் பயன்படுத்தி கவுண்டர்களில் லட்டுகளைப் பெறலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு திருப்பதி செல்லும் பக்தர்களின் மகிழ்ச்சியை இன்னும் அதிகமாக்கியுள்ளது.

Exit mobile version